Friday , December 14 2018
Breaking News
Home / கட்டூரைகள் / நமோ ஆர்மி பிரகேட வழ நமோ செக்ஸ் ஆர்மி…

நமோ ஆர்மி பிரகேட வழ நமோ செக்ஸ் ஆர்மி…

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பிரமுகரும் ‘நரேந்திர மோடி இராணுவ படை ( நரேந்திரமோடி ஆர்மி பிரிகேட்)’ என்ற அமைப்பின் நிறுவனருமான டினு ஜெயின் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அமைப்பை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் ‘நரேந்திர மோடி ஆர்மி பிரிகேட்’ என்ற அமைப்பை ‘நமோ செக்ஸ் ஆர்மி’ என கேலியாக அழைக்கின்றனர்.
குவாலியர் நகரில் னுடீ டவுன்ஸிப் ஏரியாவில் டினு ஜெயின் நடத்திவரும் அவரது அழகு நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அழகு நிலையம் என்ற பெயரில் டினு ஜெயின் அந்த கட்டடத்தில் பாலியல் தொழில் நடத்தி வருவது தெரியவந்தது. மேலும், போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டபோது டினு ஜெயின் ‘அருவருக்கத்தக்க அலங்கோலமான’ நிலையில் இருந்துள்ளார். அவரது அலங்கோல நிலையைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் சில தினங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதைத் தொடர்ந்து, பாஜகவினர் டெல்லி முதலமைச்சர் அரவந் கெஜ்ரிவாலை கேலியும் கிண்டலும் செய்து அவருக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்துவந்தனர். ஆனால்; அதற்கடுத்த ஒருசில தினங்களிலேயே பாஜக பிரமுகரும் நரேந்திர மோடி ஆர்மி பிரகேட் அமைப்பின் நிறுவனருமான டினு ஜெயின் அழகு நிலையம் என்ற போர்வையில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ள தகவல் வெளச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்டுள்ள ஜெயின் தனது முகநூல் பக்கத்தில் pசழகடைந iஅயபந-ல் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது படத்தை வைத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவெனில், “நான் எந்த நிலையில் தோன்றுகிறேனோ அதைத்தவிர என்னிடம் மறைக்க எதுவுமில்லை” என் முகநூல் ஸ்டேடஸில் குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான ஜெயின் பாலயில் தொழில் நடத்தி கைதானதைத் தொடர்ந்து பாலியல் தொழில் நடத்தி வந்த உண்மையை இதுவரை பிறருக்கு தெரியாமல் அவர் மறைத்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது.
பாஜக ஆளும் மாநிலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜெயின் பாலியல் தொழில் நடத்திவந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உபயோகிப்போர் மின்னல் வேகத்தில் உலகமெங்கும் இச்செய்தியை பரப்பி வெளிநாட்டில் சுற்றுபயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு ஒரு தர்மசங்கடம் தான்.

About admin

Check Also

பள்ளியில் படிக்கும் போதே பல்கலைக்கழக சான்றிதழ்

தமிழகத்தில் முதல் முறையாக பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் பயிற்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *