Friday , December 14 2018
Breaking News
Home / கட்டூரைகள் / பள்ளியில் படிக்கும் போதே பல்கலைக்கழக சான்றிதழ்

பள்ளியில் படிக்கும் போதே பல்கலைக்கழக சான்றிதழ்

தமிழகத்தில் முதல் முறையாக பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் பயிற்சி திட்டத்தினை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. பள்ளியில் படிக்கம் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு கணிப்பொறியில் பல்வேறு பாடத்திற்கான பயிற்சி வழங்குகிறது. தொடர்ந்து திறனாய்வுக்குப் பிறகு, பல்கலைக்கழகம் சான்றிதழையும் வழங்குகிறது. சமீபத்தில் இந்த பயிற்சியை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பெட்டவாய்த்தலையில் உள்ள சேவை சாந்தி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தலைவர் சேவை. கோவிந்தராஜ், பல்கலைக்கழக துணைவேந்தர் பள்ளிக்கு பள்ளி மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவது இதுவே முதல் நிகழ்வு என்று பேசினார். மேலும், இந்த திட்டத்தினால் மாணாக்கர்கள் பெரும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். பயிற்சி முடித்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பாஸ்கரன் அவர்கள், “பள்ளி மாணாக்கர்கள் இன்று கணிப்பொறி கல்வியில் அடிப்படை தெரிந்து வைத்திருந்தாலும், பள்ளி மாணாக்கர்கள் – பல்கலைக்கழகம் – தொழல் நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த திட்டத்தினை முதன் முதலாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளி மாணாக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படிப்பு முடித்த மாணாக்கள் பள்ளியில் படிக்கும் போதே தொடர்ந்து பல்கலைக்கழக சான்றிதழ் பெற்று வருவது எதிர் காலத்தில் அவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். மேலும், அனைவருக்கும் எளிய முறையில் கல்வியை அளித்து வரும் இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து பல்வேறு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
புற்றுPசல்கள் போன்று இன்ற கணிப்பொறி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மத்திய உயர்கல்வித் துறை, தமிழகத்தில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மட்டுமே இது போன்ற பயறிசி வகுப்புகளை தமிழகமெங்கும் நடத்த முடியும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் இருந்தும், போலியாக சான்றிதழ்கள் வழங்கும் நிறுவனங்கள் மீது உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்து இருந்தபோதும் தமிழகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாதது மாணாhக்கர்கள் நலன் பாதிக்கப்படும். எனவே உயர்கல்வத் துறை போலியாக அனுமதியில்லாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

About admin

Check Also

முன்மாதிரி பள்ளியாக உருவெடுக்கும் மழலையர் பள்ளி

சென்னையில் செயல்படும் சஹாஸ்ராஸ் மழலையர் பள்ளி ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவெடுத்து வருகிறது. பள்ளியில் சேரும் போதே மாணாக்கர்களை தொடர்ந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *