Friday , December 14 2018
Breaking News
Home / சினிமா / புருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா?

புருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா?

திருவனந்தபுரம் : ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடலில் தனது புருவ நெளிப்பு, கண் சிமிட்டல் மூலம் ரசிகர்களை ஈர்த்த பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் பயங்கர பிரபலமாகிவிட்டார். ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் அடுத்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வரும் வேலைகளும் நடக்கிறதாம்.

இந்நிலையில, பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து எடுத்த செல்ஃபி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். தனது புதிய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், தான் மலையாளத்தில் நடித்துள்ள முதல் படமான ‘கம்மார சம்பவம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக கேரளா வந்து சென்றார் சித்தார்த். அப்போது யதார்த்தமாக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

About admin

Check Also

நவ., 29ல் வெளியாகும் 2.0 திரைப்படம்: ரசிகர் மன்றங்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ள நிலையில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *