Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / அணு ஆயுதங்களை காட்டி இனி யாரும் நம்மை மிரட்ட முடியாது: பிரதமர் மோடி பேச்சு

அணு ஆயுதங்களை காட்டி இனி யாரும் நம்மை மிரட்ட முடியாது: பிரதமர் மோடி பேச்சு

அணு ஆயுதங்களை காட்டி இனி யாரும் நம்மை மிரட்ட முடியாது என்றும், அரிஹாந்தின் வெற்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 ஆயிரம் டன் எடை கொண்ட அரிஹாந்த் என்கிற முதல் நீர்மூழ்கி கப்பலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து, நாட்டிற்காக அக்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அரிஹாந்த் இந்தியாவின் வலிமைக்கு சான்றாக விளங்குகிறது. இதனை உருவாக்கி, இதற்கென தனியாக பணியாற்றிய அனைத்து பிரிவினை சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ஐ.என்.எஸ் அரிஹாந்த் அணுசக்கி திறன் கொண்டது. கடலில் இருந்து கொண்டு எதிரி நாட்டு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்த நீர்மூழ்கி கப்பல். எங்களை மிரட்டும் நாடுகளிடம், நாங்கள் அமைதி காக்கிறோம். இதற்கு காரணம், நாங்கள் அண்டைய நாட்டின் மீது கொண்டுள்ள அன்பு. அரிஹாந்தின் வெற்றி, நமது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை காட்டி நம்மை யாரும் இனி மிரட்ட முடியாது” என்று தெரிவித்தார்.
 

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *