Sunday , October 21 2018
Breaking News
Home / செய்திகள் / அதிமுக என்கிற இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஜெயலலிதா: முதல்வர் பழனிச்சாமி புக

அதிமுக என்கிற இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஜெயலலிதா: முதல்வர் பழனிச்சாமி புக

எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு, புதிதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “1.5 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக, எஃக்கு கோட்டைநை உருவாக்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான். நடப்பாண்டில் மட்டும் புதிதாக 60 லட்சம் பேர் கட்சியில் தொண்டர்களாக தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “இந்த ஆட்சியை கவிழ்க்க பல திட்டங்களை சிலர் தீட்டி வருகின்றனர். ஆனால் அச்சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து, ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அண்ணாதுரை, எம்.ஜி.ஆரின் லட்சியங்களை, ஜெயலலிதா நிறைவேற்றினார்” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

அம்ரிதசரஸ் ரயில் விபத்து விவகாரம்: 8 ரயில் சேவைகள் ரத்து

அமிர்தசரசில் நடைபெற்ற ரயில் விபத்தை தொடர்ந்து 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் தசரா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *