Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / அதிமுக கூட்டணியில் பாமக ?: மருத்துவர் ராமதாஸ் கருத்து

அதிமுக கூட்டணியில் பாமக ?: மருத்துவர் ராமதாஸ் கருத்து

மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைவதாக வெளியான செய்திகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட உள்ளதாகவும், அதில் பாமக, தேமுதிக, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி உட்பட சில கட்சிகள் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு எந்த கட்சி தரப்பில் இருந்து மறுப்பும் தெரிவிக்கப்படாமலேயே இருந்து வந்தது.

இத்தகைய சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு மேற்கொண்டுள்ள மருத்துவர் ராமதாஸ், “மக்களவைத் தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்து தவறான செய்திகளை தயாரித்து வெளியிடுவதையே சில ஊடகங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. யாருடைய கட்டளையை நிறைவேற்ற ஊடகங்கள் அவ்வாறு செய்கின்றன ? ஊடகங்கள் ஊடக தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். தரகு வேலை செய்யக்கூடாது !” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

மருத்துவர் ராமதாஸின் இந்த பதிவு மூலம், அதிமுக கூட்டணியில் பாமக இணையும் வாய்ப்பு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *