Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / அனைத்து கணிணிகளையும் கண்காணிக்க 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம்

அனைத்து கணிணிகளையும் கண்காணிக்க 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம்

அனைத்து கணிணிகளையும் கண்காணிக்க 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியது தொடர்பாக சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள எந்தவொரு கணிணியிலும் உருவாக்கப்பட்ட  அல்லது அனுப்பி வைக்கப்பட்ட அல்லதுபெறப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட தரவு விவரங்களை இடைமறித்து கண்காணிக்கவும், சங்கேதவார்த்தைகளைப் பிரித்து அறிந்து குறியீடுகளை அழிக்கவும் மத்தியஉள்துறை அமைச்சகம் 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரமளித்து ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற உதவி சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர் கார்த்திக்கேயன், ”நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்காக மத்திய அரசு எடுத்துள்ள நல்ல முயற்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். தனி மனித நலனா அல்லது பொதுநலனா என பார்த்தால் பொதுநலன் தான் முக்கியம். இதன் மூலம் நாட்டில் உலவும் தேச விரோத சக்திகளை அடியோடு அழிக்கலாம்.  இன்னும் சொல்லப்போனால் வங்கி கணக்குகளையும் கொஞ்சம் ஆழமாக ஆராய முடியும். வெளிநாடுகளில் பணம் பதுக்குவதையும் தடுக்கமுடியும். இந்தியாவில் நிலையற்றதன்மையை உண்டாக்க அண்டைநாடுகள் முயற்சித்து வரும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயமாக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்காது. தவறு செய்பவர்களுக்கு இந்த நடவடிக்கை நிச்சயமாக நெருக்கடியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

 

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *