Friday , December 14 2018
Breaking News
Home / சினிமா / அமமுகவில் இணைந்த இசையமைப்பாளர் தினா: தினகரனுடன் நேரில் சந்திப்பு

அமமுகவில் இணைந்த இசையமைப்பாளர் தினா: தினகரனுடன் நேரில் சந்திப்பு

பிரபல இசையமைப்பாளர் தினா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

வசந்த வாசல் திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் தினா, திருடா – திருடி படத்தின் மன்மத ராசா பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் இடைவேளி எடுத்துக்கொண்டு மீண்டும், திரைத்துறையில் இசைக்கலைஞராக வளரும் வரும் தினா, சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்திற்கு நேரில் சென்ற தினா, தன்னை அமமுகவின் உறுப்பினராக இணைத்துக்கொண்டதோடு, தினகரனிடம் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

 

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *