Tuesday , November 13 2018
Breaking News
Home / செய்திகள் / இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு

இந்தியாவுக்கு தேவையான பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய சம்மதிப்பதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் மீது, அமெரிக்க அரசு விதித்துள்ள பொருளாதார கட்டுப்பாடு காரணமாக, கச்சா எண்ணெய் பெறுவதில் இந்தியாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அரசிடம் சிறப்பு சலுகை எதிர்பார்த்த இந்திய அரசுக்கு, சலுகை ஏதும் அளிக்க முடியாது என்கிற அமெரிக்க அரசின் பதில் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல், இந்தியாவுக்கு கூடுதலாக தேவைப்படும் 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய தாங்கள் தயாராக உள்ளதாக, வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், இதுவரை இந்திய அரசு தரப்பில், இதற்கு பதில் அளிக்கப்படாததால், தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

About MoonEmp

Check Also

மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவு: நிர்மலா சீதாராமன் இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மறைவுக்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *