Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / உலக பார்வையை டெல்டா பக்கம் திருப்பியவர் நெல் ஜெயராமன்: டிடிவி தினகரன் புகழாரம்

உலக பார்வையை டெல்டா பக்கம் திருப்பியவர் நெல் ஜெயராமன்: டிடிவி தினகரன் புகழாரம்

லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் நெல் ஜெயராமன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரம் கொள்கிறேன்.

பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பொருட்டு தனது வாழ்வை அர்ப்பணித்து 150-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்த ஒரு சாதனையாளர் என்றே அவரைச் சொல்லலாம். நோயின் தாக்கம், கடுமையாக அவரைப் பாதித்தபோதும், தனது லட்சியத்தை விட்டுவிடாமல் அதற்காக உழைத்திட்ட தூயவர் நெல் ஜெயராமன்.

லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உற்பத்தியைப் பெருக்கி அதனைச் சந்தைப்படுத்தியதன் மூலமாக உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் ஜெயராமன்.

இயற்கை விவசாயத்தையும், வேளாண்மையையும், பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு சமூக விழிப்புணர்வாக உருப்பெற்று வரும் இச்சூழலில், நெல் ஜெயராமனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *