ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் மகன் ஹரிகிருஷ்ணா, விபத்தில் சிக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமராவின் மகன் ஹரிகிருஷ்ணா, தெலுங்கானா அருகே நல்கொண்டா மாவட்ட பகுதியில் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது கார் விபத்தில் சிக்க, ஹரிகிருஷ்ணா படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அருகில் இருந்தவர்கள் அழைத்துச்சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா காலமானார். ஹரிகிருஷ்ணாவின் மறைவை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இரு ஆண்டுகளுக்கு முன்பு அதே நல்கொண்டா மாவட்டத்தில் ஹரிகிருஷ்ணாவின் மகன், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.