Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / கஜா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு உதவ ரூ. 173 கோடி ஒதுக்கீடு

கஜா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு உதவ ரூ. 173 கோடி ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை, தமிழக கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ, நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தினார்.அவரது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் ராதாமோகன் சிங், 173 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார். இதில், தென்னை மரங்களுக்கு 93 கோடி ரூபாயும், தோட்டக்கலை பயிர்களுக்கு 80 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மறு சாகுபடி செய்ய தேவையான உதவிளும் வழங்கப்பட உள்ளன.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *