Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / கரையை கடந்தது தித்லி புயல்: கடும் காற்றால் பொதுமக்கள் அவதி

கரையை கடந்தது தித்லி புயல்: கடும் காற்றால் பொதுமக்கள் அவதி

வங்கக் கடலில் உருவாகிய தித்லி புயல், அதிகாலையில் ஒடிசா – ஆந்திரா இடையே கரையை கடந்தது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, சென்னைக்கு அருகே நகர்ந்து வந்தபோது, புயலாக உருவானது. அப்புயலுக்கு தித்லி என்கிற பெயரை சூட்டிய வானிலை ஆய்வு மையம், அதித்தீவிர புயலாக உருவாகும் என்றும் எச்சரித்திருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி, தித்லி அதித்தீவிர புயலாக உருவெடுத்தது. இருப்பினும் தமிழகத்தை விட்டு அப்புயல் நகர்ந்ததால், வட தமிழக பகுதி தப்பியது. அதேநேரம்,  ஆந்திரா-ஒடிசா இடையே கடலோர பகுதிகளை நோக்கி புயல் நகர்ந்ததால், அம்மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஒடிசா – ஆந்திரா இடையே அதிகாலை 5.30 மணிக்கு, தித்லி புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததன் தாக்கம் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மரங்கள் முறிந்து, ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் இரு மாநிலங்களிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பெரும் பாதிப்பு தவிற்கப்பட்டது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *