Saturday , February 16 2019
Breaking News
Home / சினிமா / கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சிறந்த நூல் விருது: வர்த்தக கூட்டாண்மை கழகம் அறிவிப்பு

கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சிறந்த நூல் விருது: வர்த்தக கூட்டாண்மை கழகம் அறிவிப்பு

கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்கிற நூலுக்கு இந்தியாவின் சிறந்த நூலுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நூல், கடந்த 2003ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்து. அதனை தொடர்ந்து சாகித்ய அகாடமி சார்பில், அந்நூல் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இதில் முதல் மொழியாக இந்தி மொழியில் நாகபானி வன் கா இதிகாஸ் என்கிற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மூலம், இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நாகபானி வன் கா இதிகாஸ் நூலுக்கு, இந்தியாவின் சிறந்த நூல் என்கிற விருதை இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கலாசார துறை அமைச்சகம் இத்தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *