Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் பாலிவுட் படம்: டிரைலர் வெளியீடு

காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் பாலிவுட் படம்: டிரைலர் வெளியீடு

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 2004 – 2009ம் ஆண்டு வரையிலான செயல்பாடுகளை சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள “The Accidental Prime Minister” என்கிற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றிய சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா இந்திய குடியுரிமை பெறாதவர் என்று குடியரசுத் தலைவரிடம் பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமராக மன்மோகன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 2004 – 2009ம் ஆண்டு வரையிலான செயல்பாடுகளையும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சித்தரிக்கும் வகையில், “The Accidental Prime Minister” என்கிற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலிவுடன் நடிகர் அனுபம் கெர், மன்மோகன்சிங்காக நடித்திருக்கிறார். நடிகை சூசன்னா பெர்னேட் சோனியாவாகவும், அர்ஜுன் மாத்தூர் ராகுல்காந்தியாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பாஜக மூத்த தலைவரான அத்வானியாக அவ்தர் சைனி நடித்துள்ளார். அதேபோல சோனியாவின் மகள் ப்ரியங்காவாக ஆஹானா குமாராவும், லாலு பிரசாத் யாதவாக விமல் வர்மாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படபிடிப்புகள் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நடைபெற்றது. வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலர், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

\

 

இப்படத்தின் டிரைலர் டிரைலரை பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சி பகிர்ந்துள்ளதால், இப்படத்தை தயாரிக்க பாஜகவே நிதி அளித்திருக்க கூடும் என்று காங்கிரஸ் தரப்பில் விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *