Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / கொடைக்கானலில் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: மூவர் பலி

கொடைக்கானலில் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: மூவர் பலி

கொடைக்கானல் அருகே காஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள மங்களம்கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். சின்னாளபட்டியில் வசித்து வரும் இவர், விடுமுறைக்காக மனைவி மஞ்சுளா தேவி மற்றும் மகள் விஷ்ணுப்பிரியா ஆகியோருடன் சொந்த ஊருக்கு வந்து தோட்டத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், காலை 6 மணியளவில், வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பற்றியது. இதில் கணேசன், அவரது மனைவி மஞ்சுளா தேவி மற்றும் அவர்களது மகள் விஷ்ணுப்பிரியா ஆகிய மூவரும், சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *