Saturday , February 16 2019
Breaking News
Home / சினிமா / சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் படமா ?: அஜித் விளக்கம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் படமா ?: அஜித் விளக்கம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தான் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு அஜித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து பிங்க் என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித், இன்னொரு படம் நடிக்கவும் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறார். இந்த இரு படங்களையும் தயாரிப்பது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், பிங்க் படத்தை வினோத் இயக்கத்தில் எடுத்து வருகிறார். மற்றொரு படத்தின் படபிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கும் என்றும், அது 2020 வரை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் மற்றொரு படத்தை அஜித் நடித்து கொடுக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியானது. ஆனால் இச்செய்தியை அஜித் தரப்பு மறுத்துள்ளது. மேலும் இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *