Saturday , January 19 2019
Breaking News
Home / சினிமா / சினிமாவில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது: நடிகர் சிம்பு

சினிமாவில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது: நடிகர் சிம்பு

சினிமாவில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது என்றும், செக்க சிவந்த வானம் படத்தில் கிடைத்த கதாப்பாத்திரத்திற்காக தாம் காத்திருந்ததாகவும்சி நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நடிகர் சிம்புவிற்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, விமான நிலையத்தில் கூடியிருந்த நிருபர்களிடம், “செக்க செவந்த வானம் படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. இதற்காக தான் காத்திருந்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. படத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன். சினிமாவில் வெற்றி தோல்வி எல்லாம் கிடையாது. இந்த படம் வெற்றியடைந்ததாக சொல்கிறார்கள். இன்னும் வெற்றியடைய வேண்டும். மணி மற்றும் படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை தந்து உள்ளது” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *