Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / செப்., 30ம் தேதி சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அரசு அறிவிப்பு

செப்., 30ம் தேதி சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அரசு அறிவிப்பு

சென்னையில் வரும் செப்டம்பர் 30ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நடைபெறும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய இக்கொண்டாட்டம், பின்னர் சிறிது இடைவேளிக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 22ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், செப்டம்பர் 30ம் தேதி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னை நடத்த அரசு தீர்மானித்ததோடு, அதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இச்சூழலில் தான், தற்போது மீண்டும் நிறைவு விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *