Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / ஜல்லிக்கட்டு விவகாரம்: ஆய்வு செய்ய தமிழகம் வந்தது விலங்குகள் நல வாரியம்

ஜல்லிக்கட்டு விவகாரம்: ஆய்வு செய்ய தமிழகம் வந்தது விலங்குகள் நல வாரியம்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், போட்டிகள் விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதையும் அறிந்துக்கொள்ள இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் மற்றும் அவருடைய குழுவினர் 29ம் தேதி முதல் மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகத்தில் ஜனவரி 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான, உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளில், விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, இந்திய விலங்குகள் நல வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, வாரிய தலைவர், எஸ்.பி.குப்தா தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்தடைந்துள்ளனர். இவர்கள் சென்னை, பெரம்பலூர் மற்றும் திருச்சியில் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். பின்னர் மதுரை சென்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *