Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / தலைமறைவு குற்றவாளியாக நிரவ் மோடி: குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தலைமறைவு குற்றவாளியாக நிரவ் மோடி: குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியை, தலைமறைவு குற்றவாளியாக குஜராத் மாநில நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் பல கோடி ரூபாயை கடனாக பெற்று, திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார். அவரை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சித்தபோது, நாட்டை விட்டு நிரவ் மோடி தப்பிச்சென்று, வேறு ஒரு நாட்டில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்படும், விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தி கொண்டுவர முயற்சிப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து, அவரை தலைமறைவு குற்றவாளியாக குஜராத் மாநில நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதேநேரம் அவர் மீது தலைமறை தொடர்பாக புகாரையும் பதிவு செய்ய சூரத் மண்டல வருவாய் பலனாய்வு பிரிவுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குஜராத் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *