Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை கடந்த 28ம் தேதி இரவு திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ஓரிரு நாளில் அன்பழகன் வீடு திரும்புவார். சளி மற்றும் நெஞ்சில் தொற்று காரணமாக, அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலம் பெற்று வருகிறார்” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *