Saturday , February 16 2019
Breaking News
Home / கல்வி / துவக்கப்படாத ஜியோ பல்கலை நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கியது ஏன் ?: மத்திய அரசு விளக்கம்

துவக்கப்படாத ஜியோ பல்கலை நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கியது ஏன் ?: மத்திய அரசு விளக்கம்

துவக்கப்படாத ஜியோ பல்கலை நிறுவனத்திற்கு மத்திய அரசு, தலைசிறந்த கல்வி நிறுவனம் என்கிற அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் பல கோடி ரூபாய் நிதியுதவியும் அளிக்க அரசு முன்வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு நிகராக இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்ததும் நாட்டின் 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு, தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்கிற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதில் துவக்கப்படாத ஜியோ பல்கலை நிறுவனமும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர், “பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், மும்பை இந்திய தொழில்நுட்ப கழகம், டெல்லி இந்திய தொழில்நுட்ப கழகம், பிலானியில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், மணிப்பால் உயர்நிலைக் கல்வி நிலையம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்கிற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனங்கள் மத்திய அரசால் நடத்தப்படுகின்றன. மீதம் உள்ள 3 நிறுவனங்கள் தனியாருக்கு சொந்தமானவை” என்று தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ஜாவடேக்கரின் இந்த அறிவிப்பு, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், “தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மூன்று அரசு சார்ந்த நிறுவனமும், மூன்று தனியார் நிறுவனங்களும் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தனியார் நிறுவனங்களில் ஒன்று ‘கிரீன்பீல்டு’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒன்று தேர்வு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரீன்பீல்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் பல நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் சிறந்த நிறுவனமாக ஜியோ கல்வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் இது குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *