Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / தேசிய பேரிடருக்காக 20 ஆண்டுகளில் இந்தியா செலவழித்தது என்ன ?: ஐ.நா அறிக்கையால் சர்ச்சை

தேசிய பேரிடருக்காக 20 ஆண்டுகளில் இந்தியா செலவழித்தது என்ன ?: ஐ.நா அறிக்கையால் சர்ச்சை

தேசிய பேரிடருக்காக கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா 5 ஆயிரம் கோடி மட்டுமே செலவிட்டுள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை, தேசிய அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தேசிய பேரிடரால் பொருளாதார அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் பட்டியலில் இந்திய முதல் 5 இடங்களில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பேரிடர்களால் சுமார் 120% அளவுக்கு, இந்தியா பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. பருவநிலை சார்ந்த பேரிடர்களால் மட்டும் ஏற்பட்ட இழப்பு 151 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சமீபத்தில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தேசிய பேரிடர்களால் அதிக பாதிப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் சந்திக்கும் முதல் 10 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தில் 945 பில்லியன் டாலர் இழப்புடன் அமெரிக்காவும், 492 பில்லியன் டாலர் இழப்புடன் இரண்டாம் இடத்தில் சீனாவும், 376 பில்லியன் டாலர் இழப்பீட்டோடு ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதேநேரம், நான்காவது இடத்தில் இந்தியா 80 பில்லியன் டாலர் இழப்புடன் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பீட்டின் படி 5,946 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையால், பெரும் சர்ச்சை எழுந்துள்ளதோடு, தேசிய அளவில் பரபரப்பும் தொற்றியுள்ளது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *