Wednesday , December 12 2018
Breaking News
Home / செய்திகள் / தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புது உத்தரவு: அஞ்சும் அரசியல் தலைவர்கள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புது உத்தரவு: அஞ்சும் அரசியல் தலைவர்கள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் குற்ற பின்னணிகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுருத்தியுள்ளது.

எதிர்வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில், குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால், அவர்கள் தங்களது குற்ற பின்னணிகளை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளது. அதேநேரம், தேர்தல் காலங்களில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது இது தொடர்பாக அவர்கள் விளம்பரம் அளிக்கவேண்டும் என்று அறிவுருத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால், பல்வேறு அரசியல்வாதிகளும் அச்சத்தில் உரைந்துபோய் உள்ளனர். தங்கள் குற்றப் பின்னணிகளை வெளிப்படுத்துவதால், வாக்குகள் கிடைப்பது கடினமாகும் என்றும் கருதுகின்றனர்.

 

About MoonEmp

Check Also

5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

5 மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமாவின் காரணமாக, பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. காலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *