Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / தேவசம்போர்டு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடை அடைப்பு: தந்திரி கண்டரரு ராஜீவரு விளக்கம்

தேவசம்போர்டு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடை அடைப்பு: தந்திரி கண்டரரு ராஜீவரு விளக்கம்

தேவசம்போர்டு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான் சபரிமலை நடை அடைக்கப்பட்டதாக தந்திரி கண்டரரு ராஜீவரு விளக்கம் அளித்துள்ளார்.

சபரிமலைக்கு மண்டல கால பூஜையின் போது பிந்து, கனகதுர்கா என இரு பெண்கள் சென்றதாகவும், அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியிருந்தன. அது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சபரிமலை ஐயப்ப சன்னிதான நடை அடைக்கப்பட்டது. இது தொடர்பாக தேவசம்போர்டு அமைச்சர் தரப்பில் தந்திரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது 11 பக்கத்திற்கு கண்டரரு ராஜீவரு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ”சித்திர ஆட்ட விழா மற்றும் மண்டல மகரவிளக்கு விழா காலங்களில் அய்யப்பன் கோவில் பல பிரச்சினைகளை சந்தித்தது. இந்த பிரச்சினைகள் எழுந்ததால் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக இதுபோன்ற பரிகார பூஜைகள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. டிசம்பர் 31ம் தேதி எந்த பூஜைகளும் நடைபெறவில்லை, 1ம் தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தான் 2ம் தேதி பரிகார பூஜை செய்யப்பட்டது. பெண்கள் நுழைந்ததற்காக, நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை நடந்ததாக கூறுவதும், இது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது எனக்கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்னரே பரிகார பூஜை நடந்தது. அப்போது, அதிகாரிகள் இருந்தனர். இது குறித்து தேவசம்போர்டு தலைவர் மற்றும் கமிஷனருக்கு விளக்கம் அளித்துள்ளேன். தலைவர் ஏ.பத்மகுமார் மற்றும் தேவசம் போர்டு உறுப்பினர் சங்கர் தாஸ் ஆகியோரிடம் பரிகார பூஜை நடத்துவதன் அவசியத்தை, தொலைபேசி மூலம் விளக்கினேன். தேவசம்போர்டு, உறுப்பினர்களின் ஆதரவோடு தான் பூஜை நடந்தது. போர்டு உறுப்பினர்கள் உத்தரவிட்டு தான் நடை அடைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *