Saturday , February 16 2019
Breaking News
Home / கல்வி / நடப்பு கல்வி ஆண்டில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நடப்பு கல்வி ஆண்டில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நடப்பு கல்வி ஆண்டில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “3000 பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிலேயே ஸ்மார்ட் வகுப்புக்களுக்கான ஒப்பந்தம் பெறப்பட்டு, தொடங்கப்படும். மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத் தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் கொண்டு வரப்படும். 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான புதிய பாடங்களை டேப், மொபைல் போன் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *