Saturday , January 19 2019
Breaking News
Home / சினிமா / நடிகர் ரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கு ரத்து

நடிகர் ரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கு ரத்து

நடிகர் ரஜினிகாந்த் மீது பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் கடன் பெற்றிருந்தார். இதற்காக கஸ்தூரி ராஜா அளித்த செக் வங்கியில் பணமின்றி திரும்பி வந்தது. இதனால் செக் மோசடி வழக்கின் கீழ், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் மீது, போத்ரா, வழக்கு தொடர்ந்திருந்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, போத்ரா தன்னிடம் பணம் பறிக்கவே இப்படியொரு வழக்கை பதிவு செய்திருப்பதாக ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி மீது போத்ரா அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போத்ரா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *