Friday , December 14 2018
Breaking News
Home / சினிமா / நவ., 29ல் வெளியாகும் 2.0 திரைப்படம்: ரசிகர் மன்றங்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

நவ., 29ல் வெளியாகும் 2.0 திரைப்படம்: ரசிகர் மன்றங்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ரஜினி நடித்து வெளிவர இருக்கும் 2.0 படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்கண்ட அறிவுருத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

1. தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே யாருக்கும் விற்க கூடாது.

2. ரசிகர்களிடமிருந்து தியேட்டர்கள், இருக்கைக்கு ஏற்பட நிர்ணயித்த கட்டணத்தை தவிர, வேறு எந்த கூடுதல் கட்டத்தையும் ரசிகர்களிடமிருந்து வசூலிக்க கூடாது. இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *