Friday , December 14 2018
Breaking News
Home / கல்வி / நீட் வினாத்தாள் மொழிப்பெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர்

நீட் வினாத்தாள் மொழிப்பெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர்

நீட் வினாத்தாள் மொழிப்பெயர்ப்பில் செய்யப்படும் தவறுகளுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தரப்பில், நீட் வினாக்களை மொழிப்பெயர்த்ததில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும், இத்தவறுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர், ”நீட் வினாத்தாளை மொழிபெயர்ப்பு செய்ய தமிழக அரசு நியமித்தவர்களையே பயன்படுத்தினோம். மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. அடுத்தாண்டு முதல், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *