Saturday , February 16 2019
Breaking News
Home / சினிமா / பிக்பாஸ் 2 இல்லத்திற்குள் நுழையும் சென்னை 28 நாயகி

பிக்பாஸ் 2 இல்லத்திற்குள் நுழையும் சென்னை 28 நாயகி

பிரபல விளையாட்டு நிகழ்வான பிக்பாஸ் 2ல், சென்னை 600028 முதல் பாக படத்தின் நாயகியான விஜயலெட்சுமி நுழைய உள்ளார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று, நடிகர் கமல்ஹாசனை வைத்து பிக்பாஸ் 2 நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் நடிகைகள் ஐஷ்வர்யா, யாஷிகா ஆனந்த், ஜனனி, ரித்விகா, மும்தாஜ், மமதி சாரி, நடிகர்கள் தாடி பாலாஜி, டேனியல், மஹத், சென்ட்ராயன், ஷாரிக், பொன்னம்பலம், இசை கலைஞர் அனந்த் வைத்தியநாதன், தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, பாடகி என்.எஸ்.கே ரம்யா பத்திரிக்கையாளர் வைஷ்னவி என மொத்தம் 16 பேர் கலந்துக்கொண்டனர். இதில் மமதி, அனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா, , ஷாரிக், பொன்னம்பலம், வைஷ்னவி என 7 பேர் வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், மீதம் உள்ள 9 பேர் இந்நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் வைல்டு கார்டு மூலமாக தற்போது சென்னை 28 முதல் பாகத்தின் நாயகியான விஜயலெட்சுமி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதோடு, தனக்கு ஆதரவு அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *