Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / பிரதமரின் முடிவை நியாயப்படுத்த நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் குற்றச்சாட்டு

பிரதமரின் முடிவை நியாயப்படுத்த நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் குற்றச்சாட்டு

ரபேல் போர் விமான விவகாரத்தில், பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே ராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/RahulGandhi/status/1049992547765035010

ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேநேரம், ரிலையன்ஸ் நிறுவனம் இதில் பங்குதாரராக இணைக்கப்படவேண்டும் என்று பிரான்ஸ் நாட்டை, இந்தியா நிர்பந்தித்ததாகவும் அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இச்சூழலில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இது தொடர்பாக கீச்சு பதிவு மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, “ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் ராணுவ அமைச்சர் திடீரென பிரான்ஸ் பயணம் மேற்கொள்வதற்கான காரணம் எளிமையானது. உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதேநேரம், இதில் பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே ராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *