Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / போராட்டம் எனக்கு புதிதானது அல்ல: மம்தா பானர்ஜி அதிரடி

போராட்டம் எனக்கு புதிதானது அல்ல: மம்தா பானர்ஜி அதிரடி

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தங்களுக்கு கிடைத்த தார்மீக ரீதியிலான வெற்றி என்றும், தங்களது போராட்டம் மோடி அரசுக்கு எதிரானதே என்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி. நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம். மோடி அரசு, வழக்கமான நடைமுறைகளை பின்பற்றவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என கூறவில்லை. ராஜிவ் குமாரை கைது செய்ய முடிவு செய்த சிபிஐ, முறையாக எந்த நோட்டீசும் அளிக்காமல், அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால், காவல்துறை ஆணையரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. இது நேர்மையான அதிகாரிகளுக்கு பலத்தை ஏற்படுத்தும். இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி அல்ல. தேசத்திற்கு கிடைத்த வெற்றி. மேற்கு வங்க அரசுக்கு எதிரான சிபிஐயின் அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மோடியும், அமித்ஷாவும் உள்ளனர். மோடியும் அமைச்சர்களும் என்னை அச்சுறுத்துகின்றனர். இந்த போராட்டம் திரிணாமுல் கட்சியின் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக சிபிஐ அமைப்பை மத்திய அரசு பயன்படுத்துகிறது . மேற்குவங்க அரசு தேசத்தின் நலனிற்காக தான் செயல்படுகிறது. சிட்பண்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சுதிப்தா சென் என்பவரை நாங்கள் தான் கைது செய்தோம். போராட்டத்தை எப்போது முடிப்பது என எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசிய பின் முடிவு செய்வேன். போராட்டம் எனக்கு புதிது அல்ல” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *