Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / மக்களவை தேர்தலில் 100% ஒப்புகை சீட்டு முறை அமல்படுத்தப்படும்: தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலில் 100% ஒப்புகை சீட்டு முறை அமல்படுத்தப்படும்: தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலில் 100% ஒப்புகை சீட்டு முறை அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மக்களவை தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துக்கொள்ளும் ஒப்புகை சீட்டு முறையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும் ஒப்புகைசீட்டு முறை 100 சதவிகிதம் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை, நீதிமன்றம் முடித்து வைத்தது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *