Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவு: தலைவர்கள் இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவு: தலைவர்கள் இரங்கல்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார், காலையில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய ரசாயனம் ,உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் அனந்த குமார். பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996,98, 99,2004,2009,2014 என 6 தடவை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 4,29,648 வாக்குகளை பெற்ற இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 1,80,047 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

சமீபத்தில் புற்று நோய் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அதிகாலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவுக்கு இரங்கல் தெரவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனந்த்குமார் மறைவு கேட்டு வேதனை அடைந்தேன். இது நாட்டிற்கு பேரிழப்பாகும். குறிப்பாக கர்நாடக மக்களுக்கு மிகுந்த இழப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.

அவரை போலவே இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “எனது நண்பரும், அமைச்சரவை உறுப்பினருமான அனந்த் குமாரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இளம் வயது முதல் தனது வாழ்க்கையை பொது வாழ்விற்காக அர்ப்பணித்த மறக்க முடியாத தலைவர். அவரது நற்சேவை எப்போதும் நமது நினைவில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *