Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / மத்திய அரசிடம் தமிழக அரசு துணிந்து போராட வேண்டும்: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசிடம் தமிழக அரசு துணிந்து போராட வேண்டும்: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசிடம் தமிழக அரசு துணிந்து போராட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், ”சட்டசபையை கூட்டியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. அணை விவகாரத்தில், தமிழக அரசு முன்பே தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத்திற்கு முழுநேர தலைவர் இல்லை. கர்நாடகா அணை கட்ட சாதகமாக முழுநேர தலைவர் நியமனம் செய்யவில்லை என தெரிகிறது. காவிரியில் தண்ணீரை தேக்கி வைக்க அனுமதியில்லை. அணை கட்ட அனுமதி கூடாதென, மத்திய அரசிடம், தமிழக அரசு துணிச்சலுடன் போராட வேண்டும்” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *