Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / மத்திய நீர்வளத்துறை பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது: முதல்வர் பழனிச்சாமி

மத்திய நீர்வளத்துறை பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது: முதல்வர் பழனிச்சாமி

மத்திய நீர்வளத்துறை பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “காவரி நீர் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே, காவிரியில் பல அணைகளை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. காவிரி ஷரத்து ஒப்பந்தங்களை மீறும் வகையில், கர்நாடக அரசின் செயல் உள்ளது. காவிரி நீரில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது. பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகம் மிகவும் பாதிக்கப்படும். வறட்சி ஏற்படும். மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது கார்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி. மத்திய நீர்வளத்துறை ஆணையம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *