Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / மருத்துவமனையில் அமைச்சரவை கூட்டம்: கோவா அரசியலில் பரபரப்பு

மருத்துவமனையில் அமைச்சரவை கூட்டம்: கோவா அரசியலில் பரபரப்பு

மருத்துவமனையில் இருந்தபடியே அமைச்சரவை கூட்டத்தை நடத்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரீக்கர் திட்டமிட்டுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கோவா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் மனோகர் பாரீக்கர், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த அவர், கடந்த மாதம் மீண்டும் தனது அமைச்சரவை பணிகளை கவனிக்கத் தொடங்கினார். ஆனால் திடீரென உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனோகர் பாரீக்கர், தனது அமைச்சரவை கூட்டத்தை கூட்டி திடீர் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதில் தனக்கு எதிராக இருக்கும் மூன்று அமைச்சர்களை மாற்றவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால், அரசுக்கான ஆதரவை மூவரும் திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *