Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / மேகதாது விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு ஆய்வு செய்து, திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் மாலையில் நடைபெற்றது. அப்போது பேரவையில் எழுந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, “மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் அனுமதி கொதிப்படைய வைத்துள்ளது. தமிழகத்தில் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அனைவரும் ஒருமித்த கருத்தோடும், மக்களின் உணர்வுகளை பிரபதிபலிக்கும் வகையில், இந்த தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிய விழைகிறேன். இதனை நிறைவேற்றி தர வேண்டும் என கோருகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட அரசு தரப்பிலான தனித்தீர்மானத்தில், “தமிழக சட்டசபையில் 5.12.2014, 27.3.2015 ஆகிய நாட்களில் கர்நாடகா அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல், கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்பதையும் மீறி, தற்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரமபக் கட்டப் பணிகளை துவக்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளத்துறை குழுமம் 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் சட்டசபை கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து கொள்கிறது. மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டசபை கேட்டு கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தீர்மானத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன், திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *