Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / மேற்குவங்க காவல் ஆணையர் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்குவங்க காவல் ஆணையர் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மேற்குவங்க காவல்துறை ஆணையாளர் நேரில் ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாத காவல்துறை ஆணையாளரை கைது செய்ய விசாரிப்பதற்காக மேற்குவங்கம் சென்ற சிபிஐ அதிகாரிகளை, அம்மாநில முதல்வர் மம்தாவின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட, அது 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “ராஜீவ் குமார் ஆதாரங்களை அழிக்க முற்படுகிறார் என்றும், குற்றவாளிகளிடம் ஆதாரங்களை அவர் ஒப்படைத்து வருவதால், அவரை விசாரிக்க சென்றோம். ஆனால் எங்களையே கைது செய்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துவிட்டது. நாங்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளோம். இவ்விவகாரத்தில் உரிய முறையில் ராஜீவ் குமார் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது மேற்குவங்க அரசு தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, “மேற்குவங்க மாநிலத்தின் தலைமை செயலகம், காவல்துறை ஆணையர் அலுவலகம் உட்பட பல இடங்களில் சோதனை மேற்கொள்ளவும், அச்சோதனைக்கு பின்னர் ராஜீவ் குமாரை கைது செய்யவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். அதை அவர்களே காவல்துறையினர் விளக்கம் கேட்டபோது தெரிவித்தனர். அதனாலேயே கைது செய்யப்பட்டனர். இப்போது நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மாநில அரசின் அனுமதி இன்றி சோதனைக்கோ, இதர நடவடிக்கைகளுக்கோ சிபிஐ அடி எடுத்து வைக்க கூடாது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், மேற்குவங்க மாநில காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, சிபிஐ முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டதோடு மாநில அரசின் உரிமைகளில் சிபிஐ தலையிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *