Friday , December 14 2018
Breaking News
Home / சினிமா / வெடிக்கும் சர்கார் சர்ச்சை: முன்ஜாமீன் கோரி ஏ.ஆர் முருகதாஸ் மனு

வெடிக்கும் சர்கார் சர்ச்சை: முன்ஜாமீன் கோரி ஏ.ஆர் முருகதாஸ் மனு

முன்ஜாமீன் வழங்க கோரி சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இத்திரைப்படத்தில் சர்ச்சைக்குறிய சில காட்சிகள் இருப்பதாக கூறி, அவற்றை அகற்றவேண்டும் என அதிமுக தரப்பில் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேநேரம், பல்வேறு திரையரங்குகளில் பேனர்கள் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன.

இச்சூழலில் கடந்த 8ம் தேதி இரவு ஏ.ஆர் முருகதாஸ் இல்லத்திற்கு சென்ற காவல்துறையினர், அவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஏ.ஆர் முருகதாஸ் அங்கு இல்லாத காரணத்தால், காவலர்கள் திரும்பச் சென்றுவிட்டனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில், தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை, பிற்பகலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *