Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / 1 ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ. 1.11 காசுகள் செலவு: ரிசர்வ் வங்கி தகவல்

1 ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ. 1.11 காசுகள் செலவு: ரிசர்வ் வங்கி தகவல்

ஒரு ரூபாய் மதிப்பு கொண்ட நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ. 1.11 காசுகள் செலவிடப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி தரப்பு, “1 மதிப்பு கொண்ட நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ.1.11 காசுகளும், 2 மதிப்பு கொண்ட நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ.1.28 காசுகளும், 5 ரூபாய் மதிப்பு கொண்ட நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ.3.69 காசுகளும், 10 ரூபாய் மதிப்பு கொண்ட நாணயம் ஒன்றை தயாரிக்க ரூ.5.54 காசுகளும் செலவு செய்யப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளை விட தற்போது, நாணயங்கள் உருவாக்கப்படுவது குறைந்துள்ளது. 2016 – 17ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரூ.220 கோடி மதிப்பிலான நாணயங்களும், 2015 – 16ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரூ.215 கோடி மதிப்பிலான நாணயங்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *