Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / 1500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: நால்வர் கைது

1500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: நால்வர் கைது

பென்னாகரம் அருகே 1,500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் பொன்னாகரம் பிராட்வே பகுதியில் உள்ள மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழ் கரிமேடு எஸ்.ஐ விஜயகுமார் மற்றும் அவரின் கீழ் பணியாற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த லாரி ஒன்றை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதனை சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 1,500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், லாரி ஒட்டுநர் உட்பட நால்வரை கைது செய்தனர்.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *