Friday , December 14 2018
Breaking News
Home / தொழில்நுட்பம் / புயல் பாதிக்கும் மாவட்டங்களில் பேருந்து சேவையை நிறுத்த அறிவுரை

புயல் பாதிக்கும் மாவட்டங்களில் பேருந்து சேவையை நிறுத்த அறிவுரை

கஜா புயல் கரையை கடக்க உள்ளதன் காரணமாக, புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து சேவையை நிறுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “7 கடற்கரை மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை 4 மணிக்குள் வீடு திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசார் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களில் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியதை உறுதி செய்த பின்னர் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பஸ் போக்குவரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பஸ்களை மரங்களுக்கு அருகில் நிறுத்துவதை தவிர்க்கவும் கூறியுள்ளோம்.  மக்களும் மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம். 7 மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

யல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வெளியே வர வேண்டாம். இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.வெளியூர் சென்றவர்கள், அங்கேயே பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *