Friday , December 14 2018
Breaking News
Home / கல்வி

கல்வி

பொறியியல் படிப்புக்கான 5ம் கட்ட கலந்தாய்வு: மாணவர்கள் முன்பதிவு அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்பிற்கான ஐந்தாம் சுற்று கலந்தாய்வில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கான இணையதள விருப்ப பதிவு தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான்கு சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாம் சுற்று கலந்தாய்வில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கான இணையதள விருப்ப பதிவு தொடங்கியுள்ளது. கடந்த 16ம் தேதி மாலை 5 மணி வரை தான் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாஜ்பாய் மறைவு காரணமாக அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதால் பதிவு …

Read More »

பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கல்: பிரகாஷ் ஜாவடேக்கர்

பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு, சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர், பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, தங்கள் செயல்பாடுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனையின் அடிப்படையிலேயே, ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு, சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

Read More »

நீட் வினாத்தாள் மொழிப்பெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர்

நீட் வினாத்தாள் மொழிப்பெயர்ப்பில் செய்யப்படும் தவறுகளுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர் தெரிவித்துள்ளார். மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தரப்பில், நீட் வினாக்களை மொழிப்பெயர்த்ததில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும், இத்தவறுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர், ”நீட் வினாத்தாளை மொழிபெயர்ப்பு …

Read More »

நடப்பு கல்வி ஆண்டில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நடப்பு கல்வி ஆண்டில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “3000 பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிலேயே ஸ்மார்ட் வகுப்புக்களுக்கான ஒப்பந்தம் பெறப்பட்டு, தொடங்கப்படும். மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத் தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் கொண்டு வரப்படும். 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான புதிய …

Read More »

துவக்கப்படாத ஜியோ பல்கலை நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கியது ஏன் ?: மத்திய அரசு விளக்கம்

துவக்கப்படாத ஜியோ பல்கலை நிறுவனத்திற்கு மத்திய அரசு, தலைசிறந்த கல்வி நிறுவனம் என்கிற அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் பல கோடி ரூபாய் நிதியுதவியும் அளிக்க அரசு முன்வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு நிகராக இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்ததும் நாட்டின் 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு, தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்கிற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதில் துவக்கப்படாத ஜியோ பல்கலை நிறுவனமும் இடம்பெற்றுள்ளது …

Read More »

முகவரி இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர பல்கலைக்கழக தகுதி: மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

முகவரி இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர பல்கலைக்கழக தகுதி வழங்கியதற்கு பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்தியாவின் 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்கள் தகுதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ …

Read More »

நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம்: மத்திய இடைநிலை கல்வி வாரியம் மேல்முறையீடு செய்யக் கூடாது என கீ.வீரமணி வலியுறுத்தல்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் மேல்முறையீடு செய்யக் கூடாது என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வரவேற்கத்தக்க …

Read More »

நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம்: மீண்டும் கலந்தாய்வு நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை செயல்படுத்தி, அதன் அடிப்படையில் மீண்டும் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால், …

Read More »

நீட் தேர்வு விவகாரம்: கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீட் தேர்வில் தவாறக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு, தலா 4 மதிப்பெண்கள் வீதம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொத்தம் 196 மதிப்பெண்களை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிப்பெயர்ப்பில் அதிக குளறுபடி இருப்பதால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறிப்பிட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம், மொத்தம் 196 மதிப்பெண்களை கூடுதலாக வழங்க உத்தரவிடவேண்டும் என கோரி நாடாளுமன்ற …

Read More »

2019 முதல் ஆண்டுக்கு இரு முறை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர் தகவல்

எதிர்வரும் 2019ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய தகுதித் தேர்வு மற்றும் பொது முகாமைத்துவ சேர்க்கை தேர்வுகளை, கணினி முறையில், …

Read More »