Friday , December 14 2018
Breaking News
Home / சினிமா

சினிமா

உத்திரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்துக்கு தடை

கேதார்நாத் திரைப்படத்திற்கு உத்திரகண்ட் மாநிலத்தில் தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அபிஷேக் கபூர் இயக்கத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பட் நடித்துள்ள கேதர்நாத் என்கிற திரைப்படம், கடந்த 7ம் தேதி வெளியானது. உத்தரகண்ட் மாநிலத்தில் இப்படத்தை திரையிட, சில இந்து அமைப்புகளும், இந்துத்வா கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூன், ஹரித்துவார், நைனிடால், அல்மோரா உள்ளிட்ட எட்டு …

Read More »

இயக்குனர் பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் காலமானார்

திரைப்பட இயக்குனர் பாலச்சந்தரின் மனைவி ராஜம், அதிகாலையில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சிகரத்தை தொட்ட நடிகர்கள் பலர் என்பதாலேயே, இவருக்கு “சிகரம்” என்கிற புனைப்பெயரும் சூட்டப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு பாலசந்தர் அவர்களை மறைவு பெற்றதை தொடர்ந்து, அதிகாலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரது மனைவி திருமதி. ராஜம் பாலசந்தர் அவர்களும் காலமானார். ராஜம் பாலசந்தரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் …

Read More »

அன்பிற்கு உறவுப் பாலமாக நிற்கும் காற்றின் மொழி !!

அன்பிற்கு உறவுப் பாலமாக நின்று, தனிமைக்கு ஆறுதல் சென்னால் அது காற்றின் மொழி என்கிற விதத்தில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். சந்தோஷமான குடும்பம், மகன் மிதுன், கணவர் விதார்த் என்று வாழ்ந்து வரும் ஜோதிகா, குடும்பத் தலைவியாக வீட்டின் பொறுப்பையும் கவனித்து வருகிறார். பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் 3 முறை தோற்று, தந்தை மற்றும் தனது இரு சகோதரிகளால் ஏளனப்படுத்தப்படும் ஜோதிகா, கணவர் மற்றும் மகனின் …

Read More »

நவ., 29ல் வெளியாகும் 2.0 திரைப்படம்: ரசிகர் மன்றங்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ரஜினி நடித்து வெளிவர இருக்கும் 2.0 படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்கண்ட அறிவுருத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும். 1. தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே …

Read More »

வெடிக்கும் சர்கார் சர்ச்சை: முன்ஜாமீன் கோரி ஏ.ஆர் முருகதாஸ் மனு

முன்ஜாமீன் வழங்க கோரி சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இத்திரைப்படத்தில் சர்ச்சைக்குறிய சில காட்சிகள் இருப்பதாக கூறி, அவற்றை அகற்றவேண்டும் என அதிமுக தரப்பில் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேநேரம், பல்வேறு திரையரங்குகளில் பேனர்கள் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. இச்சூழலில் கடந்த 8ம் …

Read More »

சர்கார் சர்ச்சை எதிரொலி: தஞ்சை திரையரங்குகளில் இரு காட்சிகள் ரத்து

தஞ்சையில் உள்ள திரையரங்குகளில் சர்கார் படத்தின் இரு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என அதிமுகவினர் அறிவித்துள்ள சூழலில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஜூபிடர், சாந்தி, கமலா உட்பட பல்வேறு திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளின் இத்தகைய திடீர் அறிவிப்பால், விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

Read More »

வெளியானது 2.0 டிரைலர்: 1 மணி நேரத்தில் 3 லட்சம் பார்வையாளர்களிடம் ஈர்ப்பு

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிற்பகல் வெளியிடப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் …

Read More »

மீ டூ குற்றாச்சாட்டுக்களால் அதிர்ச்சி: ஏ.ஆர் ரஹ்மான் கருத்து

மீ டூ தொடர்பாக எழுந்து வரும் குற்றச்சாட்டுக்களால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கீச்சு பதிவு மேற்கொண்டுள்ள அவர், “Me Too விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கையில் அதிர்ச்சியாக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் இன்னும் தைரியாக முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Read More »

சன்னி லியோனை எதிர்க்கும் கன்னட அமைப்பு

இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் பிரபல நடிகை சன்னி லியோனுக்கு, கன்னட ரக்ஷன வேதகே யுவ சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீரமாதேவி என்கிற இந்தி படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. இச்சூழலில் இப்படத்தில் சன்னி லியோன் நடிக்க கன்னட ரக்ஷன வேதகே யுவ சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னி லியோன், …

Read More »

சாதனை படைத்த சர்கார்: அரசியல் களத்தில் நடிகர் விஜய்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடத்துள்ள திரைப்படம் சர்கார். இதில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையில் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் டீசர் 19ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. வெளிநாட்டில் கார்பரேட்டில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கும் விஜய், தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறார். ஆனால் அவரது வாக்கை வேறு யாரோ ஒருவர் செலுத்திவிட, …

Read More »