Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

அஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீடு செய்யும் பாஜக: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு

27 சதவிகித இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை பாஜக அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று நிறைவேற்றிய 103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மை காய்வதற்குள் 2019 – 20 கல்வியாண்டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி …

Read More »

புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தனி உரிமம் பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தனி உரிமம்  பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளின் வழியாக 8 வயது குழந்தைகள் கூட புகைப்பிடிக்கும் வழக்கத்திற்கு அடிமையாக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவர்களையும்,குழந்தைகளையும் குறிவைத்து புகையைத் திணிக்கும் சிகரெட் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மத்திய, …

Read More »

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு

இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவும், இந்தியாவிற்கான பிரிட்டன் துணை தூதர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டும் ஆகியோர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை திடீரென சந்தித்து பேசினர். இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவும், இந்தியாவிற்கான பிரிட்டன் துணை தூதர் ஜெரிமி பில்மோர்-பெட்போர்டும், லண்டனைச் சேர்ந்த வெளிநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் …

Read More »

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ய, …

Read More »

இரட்டை கோபுர தாக்குதலில் தப்பித்த தொழிலதிபர் கென்யாவில் மரணம்

நியூயார்க் பயங்கரவாத தாக்குதலில் தப்பிய அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தற்போது கென்ய பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்பிண்ட்லர் என்கிற தொழிலதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், தற்போது கென்ய நாட்டின் தலைநகரான நைரோபியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக …

Read More »

சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

கேரள காவல்துறையின் உதவியுடன் சபரிமலைக்கு சென்று தரிசனம் மேற்கொண்ட கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கும் படி மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம்’ என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு கடுமையாக போராடியும், 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க விடாமல், ஐயப்ப பக்தர்கள் …

Read More »

நாட்டில் தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளது: பிரதமர் மோடி

நாட்டில் தொழில் தொடங்க வாய்ப்புகள் தற்போது அதிக அளவில் உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் 9வது வைப்ரண்ட் குஜராத் மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, “எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறியுள்ளது. முதல் 50 இடங்களுக்குள் வரும் வகையில், கடுமையாக உழைக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். உலக வங்கி மற்றும் …

Read More »

விமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்

விமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் காலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துவது தொடர்பாகவும், பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 11 தொழில் நிறுவனங்களுக்கும், விமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Read More »

கோடநாடு விவகாரம்: சயன், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, சயன் மற்றும் வாளையாறு மனோஜ் பேசிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக அதிமுக தொழில்நுட்ப அணியின் இணை செயலாளர் ராஜ்சத்யன் அளித்த புகாரின் …

Read More »

10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களுக்கு அனைத்து துறையிலும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து திமுக தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தத்தை மத்திய அரசு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகவும் இயற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு திமுக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு …

Read More »