Sunday , October 21 2018
Breaking News
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

20ம் தேதியுடன் விடைபெறுகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

20ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய பருவமழையான, தென்மேற்கு பருவமழை, கடந்த மே 29ம் தேதி துவங்கியது. இந்த மழை, கேரளாவில் துவங்கி, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பரவலாக பெய்தது. பின்னர், படிப்படியாக மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அசாம், ஒடிசா என நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பெய்தது. இந்த மழையால், நாடு …

Read More »

ஜோத்பூர் ரயிலை கவிழ்க்க சதி: சென்னை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலை கவிழ்க்க சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. சென்னை சென்டரல் ரயில்வே நிலைய காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு காலையில் குறுந்தகவல் மூலம் மிரட்டல் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், சென்னை வரும் ஜோத்பூர் ரயில் கவிழ்க்கவேண்டும் என்பதால், சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்குறுந்தகவலால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் …

Read More »

பஞ்சாப் ரயில் விபத்து விவகாரம்: காயமடைந்தவர்களை சந்தித்து சித்து ஆறுதல்

பஞ்சாப் மாநிலத்தில் தசரா விழாவின் போது நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் எம்.பி சித்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் தசரா விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் கொண்டாட்டத்தை காண மக்கள் அதிக அளவில் கூடியிருந்ததால், ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் தான், தசரா பண்டிகை கொண்டாட்டத்தை காண மக்கள் …

Read More »

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி திவாரி காலமானார்: வயது 93

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி திவாரி, தனது பிறந்தநாளான 18ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அக்டோபர் 18, 1925ம் ஆண்டு பிறந்த நாராயணன் தத் திவாரி, 1984 – 85 மற்றும் 1988 – 89ம் ஆண்டு கால வரை உத்திர பிரதேச முதல்வராகவும், 2002ம் ஆண்டு முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இரண்டு மாநிலங்களில் முதல்வராக பதவி வகித்துள்ள ஒரே தலைவர் என்கிற …

Read More »

சபரிமலை விவகாரம்: கேரள பிராமணர் சங்கம் மறுசீராய்வு மனு தாக்கல்

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்றும், முந்தைய கால நடைமுறைகளான குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து, தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், கேரள மாநில மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து …

Read More »

முதல்வர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்: கொதித்த ஸ்டாலின்

தன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளபோதே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்திருக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற கட்சி பிரமுகர் ஒருவரின் திருமன நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது துறையை தவறாக பயன்படுத்தி, தன் உறவினர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியிருக்கிறார். இதற்கான முகாந்திரங்கள் இருக்கிறது. அதன் அடிப்படையில் …

Read More »

முல்லை பெரியாறு அணை விவகாரம்: 10 பேர் கொண்ட துணைக்குழு அமைப்பு

முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க 10 பேர் கொண்ட துணைக்குழு அமைத்து, அது தொடர்பான விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக பராமரிக்க உத்தரவிடக் கோரி கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க 10 பேர் …

Read More »

சபரிமலை விவகாரம்: பந்தள மன்னர் குடும்பத்தினருடன் தேவசம்போர்டு ஆலோசனை

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், நாளை நடை திறக்கப்பட உள்ள சூழலில் இது தொடர்பாக விவாதிக்க தேவசம்போர்டு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் அனுமதிக்க, அக்கோவிலை பராமரிக்கும் தேவசம்போர்டு தடை விதித்திருந்தது. இத்தடை தொடர்பான வழக்கு ஒன்றில் 1991ம் ஆண்டு, தடையை நீக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றமும், …

Read More »

நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன்: டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அமர்கோண்டா நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமர்கோண்டா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முறைக்கேடாக பெற்றதாக ஜிண்டால் குழும தலைவர் நவீன் ஜிண்டால் மீது வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. அதேநேரம் அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், …

Read More »

பாரிக்கர் உடல்நிலையில் முன்னேற்றம்: முதல்வர் அலுவலகம் அறிக்கை

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மீண்டும் தனது பணிகளை இந்தியா திரும்பி கவனித்து வந்தார். அப்போது திடீரென மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்திய பாரிக்கர், அன்று மாலையே வீடு திரும்பினார். அவரை ஓய்வு …

Read More »