Saturday , February 16 2019
Breaking News
Home / Exclusive / யாருக்கு ‘விருந்துபடைக்க’ மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியை வலைவீசினார்? கவர்னருக்கா? கவர்னர் அலுவலக அதிகாரிகளுக்கா?

யாருக்கு ‘விருந்துபடைக்க’ மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியை வலைவீசினார்? கவர்னருக்கா? கவர்னர் அலுவலக அதிகாரிகளுக்கா?

அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை கல்லூரி பேராசிரியை ஒருவரே ‘அனுசரித்துப்போக வேண்டும்’ எனக்கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வாட்ஸ்ஆப்-ல் ‘வைரலாக’ பரவியதைத் தொடர்ந்து அந்த பேராசிரியை மீது காவல்துறையில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார்.
இந்நிலையில்இ யாருக்கு ‘விருந்துபடைக்க’ அந்த மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி அழைத்தார்? கவர்னருக்கா அல்லது கவர்னர் மாளிகையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கா என்ற உண்மையை எந்தவித நிர்பந்தத்துக்கும் ஆளாகமல் நியாயமா விசாரணை செய்து போலீஸார் கண்டறிய வேண்டும் என கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரியில் பயிலும் மாணவிகளை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு ‘ யுனிவர்சிட்டியை பொறுத்தவரைக்கும் சில விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கிறதுக்கு கல்லூரி மாணவிகள்கிட்டேயிருந்து சில விஷயங்களை அதிகாரிகள் எதிர்பார்க்குறாங்க’ எனக்கூறி மாணவிகளை மறைமுகமாக பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ள பேச்சு வாட்ஸ் ஆப்-ல் ஆடியோவாக பரவி தற்போது தமிழகம் முழுவதும் மாணவஇ மாணவிகள்இ பெற்றோர்கள்இ கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் ஆப் ஆடியோவில் நிர்மலா தேவிஇ “வீட்டுடல பெரியவங்க யாரும் இருக்காங்களா? எனக் கேட்கிறார். இல்லை என மாணவி பதில் அளிக்கிறார்.
ஆதைத் தொடர்ந்து பேராசிரியைஇ “நா இப்ப பேசப்போறது ஹையர் அஃபிசியல் மேட்டர். ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும். நுமக்குள்ள இதுவரைக்கும் ஆசிரியர் – மாணவி ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கோம். இப்ப அடுத்த லெவல் போறதுக்கு உண்டான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைச்சிருக்கு.
ஆகடமிக் சைடுல உங்களுக்கு நான் எந்த அளவுக்கு சப்போர்டிவா இருந்திருக்கேன். இப்போ ஆப்பர்ச்சுனிட்டி வருது எனக் கூறிவிட்டு. ‘போன ஸ்பீக்கர்ல போட்டிருக்கியா?’ என பேராசிரியை நிர்மலா தேவி கேட்கிறார்.
பின்னர் அவரே ‘ போனை ஸ்பீக்கர்ல போடு. நாலுபேரும் கேளுங்க. நீங்க 4 பேரும் சீக்ரெட்டா ஒன்னு பண்ண வேண்டியிருக்கு. அப்படி பண்ணா நீங்க பெரிய லெவலுக்கு வரமுடியும். யுனிவர்சிட்டியை பொறுத்தவரைக்கும் சில விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கிறதுக்குக் கல்லூரி மாணவிகள்கிட்டேயிருந்து சில விஷயங்களை அதிகாரிகள் எதிர்பார்க்குறாங்க’ என மறைமுகமாக மாணவிகளுக்கு தூண்டில் போடுகிறார்.
“இதுவரைக்கும் அந்த லெவலுக்கு நான் இறங்கினது இல்லை. ஆனால் சில விஷயங்களை அவங்க கொஞ்சம் எதிர்பார்க்கிறாங்க. ரொம்ப நாளா அவங்க கேட்டுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு முன்னாடி நானும் நாகராஜன் ஸாரும் பேப்பர் ரீவேல்யூயேசனுக்கு வந்தோம்ல அந்த சந்தர்ப்பத்திலிருந்து என்னை ரொம்ப கேட்டுட்டு இருக்காங்க.
இந்த விஷயம் வெளியில் தெரிஞ்சிதுனாஇ கண்டிப்பா வந்து இதுல யார் யார் இன்வால்வ் ஆகியிருக்காங்களோ அவங்களப் பத்தி நெகட்டிவா வர்றதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. இன்னும் ஒன்றரை மாதம்தான். ஆப்புறம் பிராக்டிகல்ஸ் முடிஞ்சிருக்கும். நான் இந்த ஸ்டெப்பை எடுக்க ஆரம்பிக்கிறேன். அதாவது நீ ‘அந்த மாதிரி’ நடந்துக்கிட்டா அகடமிக் ரீதியாவும்இ ஃபினான்ஸியலாவும் நல்ல சப்போர்ட் இருக்கும். நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு சப்போர்ட் இருக்கும். இன்னும் கொஞ்சம் பேசணும்.
நீங்க இதை உங்க அப்பாஇ அம்மாவுக்கு சொல்லிட்டு செய்வீங்களாஇ சொல்லாமல் செய்வீங்களா என்பது எனக்கு தெரியாது. புpளான் பண்ணுங்க. புதுசா அக்கெண்ட் ஓபன் பண்ணிட்டாஇ அமௌண்டை அக்கவுண்ட்ல போட்டுவிடுறேன். நீங்க 4 பேரோ 5 பேரோ…சரியா?. நான் உங்ககிட்ட அடுத்தவாரம் பேசுறேன். நீங்க இன்னும் கொஞ்சம் டீடெய்லா பேசுங்க” எனக் கூறுகிறார்
“மேடம்இ இதுபற்றி இதுக்கு மேல பேசவேண்டாம்” என மாணவிகள் கூறி மறுப்பு தெரிவிக்கின்றனர்.
ஆதற்கு பேராசிரியை நிர்மலா தேவிஇ “ வேண்டாம்னு சொல்றீங்களா?. சரிடா கண்ணா. ஒரு வாய்ப்பு வந்தது. அதான் சொல்றேன். இதை வெளில சொல்லிக்க வேணாம். உங்க குடும்பத்துக்குள்ளேயே சொன்னா வித்தியாசமா தெரியும். இன்னைக்கு வியாழக்கிழமை. நீங்க வெள்ளிக்கிழமைஇ சனிக்கிழமை நல்லா யோசிச்சு ஞாயிற்றுக்கிழமை சொல்லுங்க. ஆப்பர்சூனிட்டி அவ்வளவு ஈசியா வராது. அதனால இன்னும் கொஞ்சம் யோசிங்க. நானே யோசிச்சுதான் கேட்கிறேன்.” என்கிறார்.
“வேண்டாம்இ மேடம்” என மாணவிகள் மீண்டும் மறுக்கின்றனர்.
அதற்கு பேராசிரியை நிர்மலா தேவிஇ “நான் சொல்ல வர்ற ரீஸன் வந்துஇ அந்த கவர்னர் மீட்டிங்; வீடியோவுல நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு என்னால் மூவ் பண்ண முடியும். இந்த ஹன்ட் மட்டும்தான் இப்போ கொடுப்பேன். ஏன்னாஇ அந்த அளவுக்கு ரகசியம் இது. என்னையவே நிறைய டெஸ்ட் பண்ணியிருக்காங்க. அதுக்கப்புறம்தான் இந்த மாதிரி என்கிட்ட கேட்ருக்காங்க. நீங்க வேண்டாம்னு சொன்னா நா உங்க மார்க்குல எல்லாம் கை வெக்க மாட்டேன். ஆனால் நீங்க யோசிங்க. இந்த சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது.
நா அடுத்த லெவலுக்கு போகப்போறேன். கூட உங்களையும் கை துணைக்கு கூப்பிடுறேன். உங்களை கை தூக்கிவிட கூப்பிடுறேன். இந்த காலத்துல நா பேச வர்ற விஷயங்கள் எல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம். அது உங்களுக்கும் தெரியும். ஏன் இந்த உலகத்துக்கே தெரியும். யாருடைய பேச்சையும் கேட்காம நீங்களா யோசிச்சு சொல்லணும். நா சனிக்கிழமை ஈவ்னிங் கால் பண்றேன். ஓகேவா?” என்கிறார் பேராசிரியை.
மாணவிகளோஇ “இதுக்கு மேல பேசவேண்டாம். எங்களுக்கு இஷ்டமில்லஇ மேம்” எனக் கூறுகின்றனர். “ஓகே..டா. உங்களுக்கு இஷ்டம் இல்லன்னாலும் இதைப்பற்றி வெளியே சொல்ல வேண்;டாம்” என பேராசிரியை கூறுகிறார். “சரி” எனக்கூறி மாணவிகள் தொடர்பை துண்டிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து மாணவிகள் கல்லூரி செயலாளரிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாலை கல்லூரி நிர்வாகம் கிடப்பில் போட்ட நிலையில் பேராசிரியை பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியதால் கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியை 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில்இ மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா தேவிஇ தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவிஇ மாணவிகளுடன் பேசிய நோக்கத்திற்கு பின்னணியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்? யாருக்கு ‘விருந்து படைக்க’ மாணவிகளுக்கு பேராசிரியை வலைவீசினார்? துமிழக கவர்னருக்கா அல்லது கவர்னர் மாளிகையிலுள்ள உயரதிகாரிகளுக்கா? என்பதை எந்தவித நிர்பந்தத்திற்கு ஆளாகாமல் போலீஸார் நேர்மையாக விசாரணை நடத்தி உண்மைனயை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தஞ்சாவூரைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஏ நல்லதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
“தென்னக மாநிலத்துக்கு அண்மையில் மாற்றலாகி வந்த கவர்னர் ஒருவர் மீது கவர்னர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதாகவும் அக்குற்றச்சாட்டு குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகவும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் மாணவிகளை ‘விருந்து படைக்க’ அந்த பேராசிரியை வலைவீசியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஒருவேளை தமிழக கவர்னர் அல்லது கவர்னர் மாளிகையில் உள்ள உயரதிகாரிகளுக்கு இந்த மாணவிகளை விருந்து படைக்க அந்த பேராசியை வலைவீசினாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஏற்கெனவே மேகலயா மாநில கர்னராக பணியாற்றிவந்த தமிழகத்தைச் சேர்ந்த ஷண்முகநாதன் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது என்பதை இத்தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும”; என்றார் வழக்கறிஞர் நல்லதுரை.

About admin

Check Also

மரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு?

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முறைகேடுகளும்  கடந்த சில ஆண்டுகளாகப் பரவலாகக் கூறப்பட்டு வந்தன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *