Saturday , February 16 2019
Breaking News
Home / Exclusive / 4 கோடி டு 21 கோடி…. டி.ஆர்.பாலுவுக்காக உயர்த்தப்பட்ட நில மதிப்பு..

4 கோடி டு 21 கோடி…. டி.ஆர்.பாலுவுக்காக உயர்த்தப்பட்ட நில மதிப்பு..

அரசால் கையகப்படுத்தப்படவுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தின்; மதிப்பு சுமார் பத்துமாத காலத்தில் ரூ 4 கோடியிலிருந்து ரூ 21 கோடிக்கு உயருமா?
இதற்கான பதில் மேற்படி நிலம் யாருக்குச் சொந்தம் -சாமானிய மனிதரா அல்லது அரசியல் பின்புலம் உள்ளவரா- என்பதைப் பொறுத்தது.
மேற்படி நிலம் சர்வ வல்லமை படைத்த அரசியல்வாதிக்கு அல்லது அவரது ஆதரவாளருக்குச் சொந்தமானது என்றால் இது சாத்தியமே என நிரூபித்துள்ளனர் தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்.
தஞ்சாவூர் அருகே மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறையின் கீழ் இயங்கிவரும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தை (ஐனெயைn ஐளெவவைரவந ழக குழழன Pசழஉநளளiபெ வுநஉhழெடழபல – ஐஐகுPவு) உலகத் தரத்திற்கு மேம்படுத்துவதற்காக தஞ்சாவூர் வட்டம் நாஞ்சிக்கோட்டை மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்களில் தஞ்சாவூர் வ.உ.சி நகரைச் சேர்ந்த அப்துல் சுபஹான் என்ற தனியாருக்குச் சொந்தமான சுமார் 21 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நில எடுப்புச் சட்டம் 17(2)ன் கீழ் அவசர கால நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதற்காக முறைப்படி நாளிதழ்களில் 2010ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி விளம்பர அறிவிப்புச் செய்யப்பட்டு, அரசாணை ( பு.ழு. 25ஃ2010 (யுபசiஉரடவரசந னுநியசவஅநவெ) ழn குநடிசரயசல 9இ2010) வெளியிடப்பட்டது. கையகப்படுத்தப்படு;ம் நிலங்களுக்கு ஈடாக அரசின் வழிகாட்டு மதிப்பின்படி கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ 7 லட்சம் வீதம் 21 ஏக்கருக்கு இழப்பீடாக ரூ 1.47 கோடி வழங்க அரசு முன்வந்தது.
அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ராஜ் எஜூகேசனல் டிரஸ்ட் என்ற நிறுவனத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் மேற்படி நிலத்திற்கான பவர் ஆஃப் அட்டர்னி தங்களிடம் இருப்பதாகவும், அந்த நிலத்தை கல்வி பயன்பாட்டுக்கு பயன்படுத்த இருப்பதால் அரசாங்கம்; அதை கையகப்படுத்தக் கூடாது எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிலத்தை கையகப்படுத்த அரசால் ஏற்கெனவே முறையான அறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டதால் அதை தற்போது நிறுத்தி வைக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் பதிலளித்தது. இதையடுத்து மேற்படி நிறுவனத்திடமிருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு மேலும் ஒரு கடிதம் வந்தது. அதில் மேற்படி நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகரக்குழு உறுப்பினர் ஏ கே சுந்தர் கூறுகையில், “மேற்படி ராஜ் எஜுகேசனல் டிரஸ்ட் டி ஆர் பி ராஜா என்பவருக்குச் சொந்தமானது. அவர் வேறு யாருமல்ல. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி ஆர் பாலுவின் மகன் ஆவார். ராஜா தற்போது மன்னார்குடி எம் எல் ஏ-ஆக உள்ளார” என்றார்.
ஏற்கெனவே தஞ்சை வருவாயக்; கோட்டாட்சியர் (ஆர்டிஓ) இரா. பெ. ரவீந்திரன் மேற்படி நிலங்களில் ஆய்வு செய்து அந்நிலங்களின் முதனிலை விலைமதிப்பு ரூ 4 கோடி என நிர்ணயம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர்க்கு 2009ம் ஆண்;டு ஜுலை 27-ம் தேதி அறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் அரசியல் தலையீடு மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக ஆர்டிஓ ரவீந்திரன் சுமார் பத்து மாதங்கள் கடந்து 2010ம் ஆண்டு மே 5-ம் தேதி மாவட்ட வருவாய் அலுவர்க்கு மீண்டும் ஒரு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில் மேற்படி நிலங்களின் விலையை ரூ 22 கோடி என நிர்ணயம் செய்திருந்தார்.
அந்த அறிக்கையைப் படித்து அதிர்ச்சியடைந்த அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் மு கருணாகரன் 2010ம் ஆண்டு மே 7-ம் தேதி மேற்படி நிலங்களை நேரடியாக ஆய்வு செய்தபோது மேற்படி ஆர்டிஓ அரசின் எந்தவொரு விதி மற்றும் வழிகாட்டுதலையும் பின்பற்றாமல் முன்னாள் அமைச்சர் டி ஆர் பாலுவின் குடும்பத்தினர்க்கு ஆதராவாக அதிக இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரும் நோக்கில் ரூ 22 கோடி விலை நிர்ணயம் செய்தது தெரியவந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் தன்னுடை அறிக்கையில், நில உரிமையாளர் மற்றும் நிலத்தில் பற்றுடைய நபர்கள் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை பெறவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பின்னர் நீதிமன்றத்திற்கு நில உரிமையாளர் சென்றால் அதில் வருவாய் கோட்ட அலுவலர் உயர்ந்த மதிப்பை நிர்ணயம் செய்து உள்ளார் என்பதை காட்டி பல மடங்கு இழப்பீட்டுத் தொகை பெற வழிவகுக்கும் வகையிலும், அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் வகையிலும் வருவாய் கோட்ட அலுவலர் விலை நிர்ணயம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் விதிகளை மீறியும் அரசுக்கு அதிக இழப்பீடு நேரிடும் வகையில் செயல்பட்டுள்ள வருவாய் கோட்ட அலுவலர் மீது 17(டி) ன் கீழ் குற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசுக்கு கருணாகரன் பரிந்துரை செய்தார்.
“அதன் பின்னர் நடந்த கேலிக்கூத்துதான் அரசியல் தலையீட்டின் உச்சகட்டம். தவறு செய்த ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுத்து அவரை தண்டிப்பதற்கு பதிலாக குற்றத்தை கண்டுபிடித்த மாவட்ட வருவாய் அலுவலர் அதிகார வர்க்கத்தினரால் உடனடியாக சென்னைக்கு ஆவின் இணை மேலாண் இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார்” என்றார்;; ஏ கே சுந்தர்.
“இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மாவட்ட வருவாய் அலுவலரின் அறிக்கையை அப்போதைய மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.ஷண்முகம் மேல் நடவடிக்கைக்காக வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ஆர்டிஓ மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவiரை காப்பாற்றும் நோக்கோடு செயல்பட்டு மேற்படி சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் ஷண்முகம் ஆர்டிஓவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸ் அனுப்பினார். அதற்கான அதிகார் மாவட்ட ஆட்சியருக்கு இல்iலை. முறையாக அவர் மாவட்ட வருவாய் அலுவலரின் அறிக்கையை மாநில் வருவாய் நிர்வாக ஆணையருக்குதான் அனுப்பியிருக்க வேண்டும். இதன்மூலம் வருவாய்த்துறை நிர்வாக ஆணையரின் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷண்முகம் எடுத்துக் கொண்டார்” என சுந்தர் குற்றம்சாட்டுகிறார்.
அதன்பின்னர் தமிழக அரசு டி ஆர் பாலுவுக்கு ஆதரவாக செயல்பட்டு நில எடுப்புச் சட்டம் பிரவு 4(1)ன் கீழ் மேற்படி நிலங்களை கையகப்படுத்துவதை ரத்துச் செய்து தனியார் நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலத்தை வாங்கலாம்; என முடிவு செய்தது.
இதுகுறித்து தற்போது வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மேற்படி நிலங்களை தனியார் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி கையகப்படுத்தும் நடவடிக்கை தற்போது அரசின் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

About admin

Check Also

மரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு?

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முறைகேடுகளும்  கடந்த சில ஆண்டுகளாகப் பரவலாகக் கூறப்பட்டு வந்தன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *